அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: தம்பிதுரை தெம்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை எதிரில், எம்.ஜி.ஆரின் 109வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை எம்.பி பேசியதாவது:

அதிமுக அடிமைக் கட்சி என்று கூறுகின்றனர். அதிமுக அடிமையாக இருந்தால், கடந்த மக்களவை தேர்தலில் எப்படி தனித்து போட்டியிட முடியும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும். ஆனால் அதிமுக தனித்துதான் ஆட்சி அமைக்கும். தமிழக மக்கள், கூட்டணி ஆட்சியை இதுவரை விரும்பியது இல்லை. இனியும் விரும்ப மாட்டார்கள். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே அதிமுகவின் கொள்கை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: