தமிழக பாஜ தேர்தல் அறிக்கை தயாரிக்க தமிழிசை தலைமையில் 12 பேர் கொண்ட குழு: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பாஜ சார்பில் வரும் 2026- சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, முன்னாள் மாநில தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அமைக்கப்படுகிறது. அதன்படி, இந்த குழுவின் மாநில துணை தலைவர்கள் துரைசாமி, ராமலிங்கம், கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் ராம ஸ்ரீனிவாசன், கார்த்தியாயினி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் நரசிம்மன், மாநில செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத், மாநில தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு அமைப்பாளர் அர்ஜூனமூர்த்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, மாநில விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் ஆதித்யா சேதுபதி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: