அழிஞ்சமங்கலம் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

 

நாகப்பட்டினம், ஜன.14: நாகப்பட்டினம் அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராகாந்தி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவர்கள் சத்யா, அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலசுப்பிரமணியன், கல்வியாளர் முத்துலட்சுமிஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காரைக்கால் அதானி துறைமுகத்தின் முதன்மை செயல் அலுவலர் சச்சின் வாத்சவா, அவரது மனைவி வினிதா ஆகியோர் கலந்துகொண்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர். நூற்றுக்கு மேற்பட்ட பாரம்பரிய விதைகள் கண்காட்சி நடந்தது. அதேபோல பாரம்பரிய உணவு கண்காட்சியும் நடைபெற்றது.
இதில் அதானி பவுண்டேஷன் திட்ட மேலாளர் சாருமதி, திட்ட அலுவலர்கள் ஆனந்தி, நவீன் உள்பட பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காந்தி நன்றி கூறினார்.

Related Stories: