கோபால்பட்டி, ஜன. 14: நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார் (25). கூலித்தொழிலாளி. இவர் கோவையில் தங்கி பணிபுரிந்த போது அங்குள்ள தனியார் கல்லூரியில் சிவகங்கை குன்றக்குடியை சேர்ந்த பூமிகா (23) என்பவர் படித்து வந்தார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சரவணகுமாரும், பூமிகாவும் வீட்டை விட்டு வெளியேறு நத்தம் குட்டூர் சிவன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இன்ஸ்பெக்டர் லாவண்யா, எஸ்ஐ பிரதீபா இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தனர். பின்னர் இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொண்டனர் என தெரிவித்து காதலன் சரவணகுமார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
