பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநி, ஜன. 12: பழநி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று முன் தினம் இரவு முதல் லேசான மழை பெய்து வருகிறது. நேற்று காலை தொடர்ந்து சாரல் மழை பெய்தது. எனினும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிக கூட்டத்தின் காரணமாக மலைக்கோயிலில் பக்தர்கள் சுற்றுவட்ட முறையில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்திற்கு சுமார் 2 மணி நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. பக்தர்கள் வந்த வாகனங்களால் கிழக்கு மற்றும் மேற்கு கிரிவீதிகளில் இருந்த சுற்றுலா வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பி வழிந்தன.

 

Related Stories: