போகிப்பண்டிகையை முன்னிட்டு குப்பைகளை சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும்

தஞ்சாவூர், ஜன.12: தஞ்சை மாநகராட்சியில் போகிப்பண்டிகையை முன்னிட்டு குப்பைகளை சேகரிப்பு மையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் அறிவுறுத்தி உள்ளார். இது குறித்து தஞ்சை மாநகராட்சி ஆணையர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் போகிப் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் (12 மற்றும் 13ம் தேதிகளில்) அனைத்து வார்டுகளிலும் குப்பைகள் சேகரிக்கும் மையங்களில் தங்களது வீடுகளில் இருந்து உருவாகும் திடக்கழிவுகள் மற்றும் ஈரக்கழிவுகள், உலர் கழிவுகளை ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தங்களது வீடுகளுக்கு அருகாமையில் உள்ள பொது இடங்கள், சாலை ஓரங்களில் பழைய குப்பைகளையும், பொருட்களை தீ வைத்து எரிப்பதனால் ஏற்படும் காற்று மாசை தடுக்கவும் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 51 வார்டுகளில் உள்ள குப்பை சேகரிக்கும் மையங்களிலும் தூய்மை பணியாளர்கள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணி மேற்கொள்வர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: