கம்பம், ஜன. 10: பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி சார்பாக ஊரக தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கம்பத்தில் விவசாயிகளுக்கு விளக்கப் பயிற்சி அளித்தனர். தென்னையில் வேர் மூலம் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கொண்ட டிஎன்ஏயூ டானிக்கை அளிப்பதன் மூலம் 20 சதவீதம் கொட்டை மகசூல் அதிகரிக்கிறது. மேலும் தென்னையை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிர்ப்புத்திறனை ஏற்படுவது குறித்து விளக்கினர்.
மேலும் இந்த டிஎன்ஏயூ டானிக்கை ஒரு மரத்திற்கு 200 மில்லி என்ற அளவில் வேர் மூலம் அளிக்க வேண்டும் என செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், இந்த நிகழ்வின் போது, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் ஸ்ரீகாந்த், சூர்யா, சையது சிராஜ், திருவெங்கடேஸ்வரன், தோபல்டோ விம்பாஸ், வருண், விருத்தகிரி, விதுரன், யத்வீர்சிங், யோகேஷ் ஆகியோர் தென்னையில் வேர் ஊட்டம் செய்யும் முறை குறித்து விளக்கினர்.
