தரங்கம்பாடி, ஜன.10: மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரில் உள்ள டிபிஎம்எல் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ஜான்சன் ஜெயக்குமார் வரவேற்றார். விழாவில், 349 மாணவ, மாணவிகளுக்கு அரசு வழங்கும் விலையில்லா மடிகணினியை மாவட்ட திமுக செயலாளர், பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதாமுருகன் வழங்கினார். விழாவில், சபை குரு ஜான்சன்மான்சிங், பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, துணை தலைவர் பொன்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் ஹேனாகிளாடிஸ் நன்றி கூறினார்.
