வேதாரண்யம், டிச.10: வேதாரண்யம் தாலுகா தேத்தாக்குடி வடக்கில் ஒருங்கிணைந்த விவசாய முறைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் கள ஆய்வு நிகழ்ச்சி, வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற வேளாண் பணிப்பயிற்சி திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது.
மாணவிகள் அமிர்தலட்சுமி, ஆஷிகா, ஹரிப்பிரியா, ஹரிணி சுபலட்சுமி, கலைமதி, லஷிகா ,பத்மாவதி, சுந்தர சினேகா ஆகியோர் கலந்து கொண்டு, ஒருங்கிணைந்த விவசாய முறையின் பயன்கள் குறித்தும், ஒருங்கிணைந்த விவசாய முறையில் மாடுகள், ஆடுகள், கோழிகள் வளர்ப்பு, பயிர் சாகுபடி,
இயற்கை உர பயன்பாடு, கழிவு மேலாண்மை உள்ளிட்டவை ஒரே பண்ணையில் இணைந்து செயல்படுவதால், மண் வளம் மேம்படுவதுடன் விவசாயிகளின் வருமானம் உயர்வதாக மாணவிகள் எடுத்துரைத்தனர். மேலும், கோழிப் பண்ணை, கால்நடை பராமரிப்பு, தீவன மேலாண்மை, இயற்கை முறையிலான உர தயாரிப்பு போன்றவை குறித்தும் செய்முறை செய்முறை விளக்கமளித்தனர்.
