செம்பனார்கோயில் அருகே செங்கரும்புகள் அறுவடை மும்முரம்

செம்பனார்கோயில், ஜன.10: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் பகுதியில் விவசாயிகள், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சாகுபடி செய்துள்ள செங்கரும்புகள் அறுவடைக்கு தயாரானது.
இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் செங்கரும்புகளை, விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடப்பு ஆண்டு சித்திரை, வைகாசி போன்ற மாதங்களில் செங்கரும்பு சாகுபடி செய்தோம். பொதுவாக கரும்பு பயிரை மணல் பாங்கான பொன்செய் நிலத்தில் தான் சாகுபடி செய்வது வழக்கம்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் செங்கரும்புகளை அறுவடை செய்து கட்டுகளாக கட்டப்பட்டு விற்பனை செய்து வருகிறோம். அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை என்பதால் விரைந்து அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளோம். செங்கரும்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு சுமார் ரூ.60 ஆயிரம் வரை செலவாகும். எனவே விவசாயிகள் லாபம் பெறும் வகையில் செங்கரும்புக்கு உரிய விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்தனர்.

 

Related Stories: