ஒட்டன்சத்திரம், ஜன. 9: ஒட்டன்சத்திரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் வெனிசுலா மீது போர் தொடுத்து அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவியையும் கைது செய்த அமெரிக்காவை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும் கோஷமிட்டனர். இதில் மாவட்ட குழு உறுப்பினர் சுமதி மற்றும் ஒன்றிய குழு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
