ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

பாலக்காடு, பிப். 25: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொரட்டி அருகே ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கொரட்டி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் மலப்புரம் மாவட்டம் எடக்கராவை சேர்ந்த ரியாஸ்பாபு (41) என்பது தெரியவந்தது.

இவர், நேற்று முன்தினம் 5 மணியளவில் எர்ணாகுளத்திலிருந்து திருச்சூர் பகுதிக்கு செல்கின்ற ரயிலில் இருந்து கொரட்டி ரயில் நிலையம் அருகே தவறி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கொரட்டி ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், உடல் பிரேத பரிசோதனைக்காக சாலக்குடி தாலுகா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

 

Related Stories: