பாம்பு கடித்து பெண் சாவு

கோபி, பிப். 25: நம்பியூர் அருகே உள்ள சாணார் புதூரை சேர்ந்தவர் முருகன் மனைவி அய்யம்மாள் (38). கூலித்தொழிலாளி. கடந்த 18ம் தேதி அய்யம்மாள் வீட்டின் அருகே இருந்த தென்னை மட்டையை எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது பாம்பு கடித்தது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அய்யம்மாள் உயிரிழந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: