வழிப்பறி செய்த வாலிபர் கைது

மதுரை: மதுரை, சிந்தாமணி ஜங்சன் ராஜம்மா நகரை சேர்ந்தவர் முத்து(43). இவர் கீரைத்துறை ரயில்வே கேட் அருகே உள்ள ஹோட்டலில் சாப்பாடு வாங்கச்சென்றார். அப்போது அவரை வழிமறித்த தபால்தந்திநகரை சேர்ந்த கோகுல்(21) என்பவர், கத்தியை காட்டி நான் பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் நெருங்கிய கூட்டாளி என்று கூறி மிரட்டி பணம் கேட்டுள்ளார். மேலும்ங முத்துவிடம் இருந்த ரூ.450ஐ பறித்துக்கொண்டார். இதுகுறித்து அவர் கீரைத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து, ரவுடி கோகுலை கைது செய்தனர்.

 

Related Stories: