திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு

ஊட்டி, பிப். 25: தேசிய பசுமைப்படை சார்பில் ஊட்டி அருகேயுள்ள காந்தள் ஓம் பிரகாஷ் ஆரம்ப பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா, தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ ஆகியோர் திடக் கல்வி மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

வீடுகளில் பூந்தோட்டம், மூலிகை செடிகள் வளர்க்கும் மாணவர்களை பாராட்டி துணி பைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சூழல் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஏற்பாட்டினை கற்பகவல்லி, மகாலட்சுமி செய்திருந்தனர்.

 

Related Stories: