விருதுநகர், பிப்.25: நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது. விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது. தலைமையாசிரியை ஜமுனாராணி தலைமை வகித்தார். ஏற்பாடுகளை விளையாட்டு ஆசிரியை ரேவதி செய்திருந்தார். பின்னர் நடைபெற்ற ஆண்டுவிழாவை தலைமையாசிரியை துவக்கி வைத்து வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
முதன்மைக்கல்வி அலுவலர் அரவிந்தன் தலைமை வகித்தார். மாவட்டக்கல்வி அலுவலர் சாந்தி வாழ்த்திப் பேசினார். இதில், மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டு மற்றும் கலைநிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சேர்மன் மாதவன் பரிசுகளை வழங்கினார். இதில், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். நிறைவில் தமிழாசிரியை தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.
