பேராசிரியர்கள் மனிதச்சங்கிலி

மதுரை, பிப். 25: அரசு உதவி பெறும் கல்லூரி இணைப் பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு பலன்கள் வழங்க கோரி ஏயூடி – மூட்டா சார்பில் மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மனிதசங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மூட்டா தலைவர் பெரியசாமி, பொதுச்செயலாளர் செந்தாமரைக்கண்ணன், துணை தலைவர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு கல்லூரி, உதவி பெறும் கல்லூரிகள் என்ற பாகுபாடுகளை களைய வேண்டும், அரசு கல்லூரிகள் போலவே, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் இணைப் பேராசிரியர்களுக்கும் பணி மேம்பாட்டு பலன்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இப்போராட்டம் நடைபெற்றது.

 

Related Stories: