அந்தியூர் பகுதிகளில் திடீர் கோடை மழை

அந்தியூர்,பிப்.25: ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரியை எட்டி உள்ளது. கடந்த 2 நாட்களாக வெப்பம் மக்களை வாட்டி வந்தது. இந்த நிலையில் அந்தியூர் அதன் சுற்றுவட்டாரப் பகுதியை குளிர்விக்கும் விதமாக நேற்று மாலை திடீரென கோடை மழை பெய்தது. வெயில் அடித்தபோதும் சிறிது நேரம் கோடை மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவியது. ஆனால் அடுத்த 15 நிமிடங்களில் மழை நின்று மீண்டும் வெயில் அடித்ததால் வெப்பம் வாட்டி வதைத்தது.

 

Related Stories: