குத்தாலத்தில் புதிய அங்காடி கட்டிடம் திறப்பு

குத்தாலம், ஜன.9: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு பகுதியில் சாலியத்தெருவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-2024 ஆண்டு நிதியிலிருந்து ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை வகித்தார்.பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் தமிழரசன்,வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா வரவேற்றார். இதில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய ரேஷன் கடையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

அப்போது குத்தாலம் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ராஜஸ்ரீதினேஷ், சேகர் மற்றும் காங்கிரஸ் வடக்கு வட்டார தலைவர் ஜம்பு கென்னடி,திமுக நகர துணை செயலாளர் சட்ட செந்தில், விற்பனையாளர் ஆனந்தி, உள்ளிட்ட அனைத்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி மன்ற இளநிலை உதவியாளர் சுந்தர் நன்றி கூறினார்.

 

Related Stories: