கஞ்சா விற்ற வாலிபர் கைது

தர்மபுரி, ஜன.9: தர்மபுரி டவுன் எஸ்ஐ வெங்கடேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றபோது பிடமனேரி ஏரிக்கரையில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் சோதனை செய்தபோது 400 கிராம் கஞ்சா வைத்திருந்ததும், சோளக்கொட்டாய் பகுதியை சேர்ந்த கோகுல்(21) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: