திண்டுக்கல், ஜன. 8: திண்டுக்கல்லில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைவர் ஜெயந்தி கோரிக்கை விளக்க உரை நிகழ்த்தினார். போராட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்கிற பெயரை மாற்றி நிதி குறைத்து 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்க புதிய சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், புதிய சட்ட நகலை கிழித்தெறிந்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் 50 மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
