கமுதி, ஜன.7: கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. நூறு நாள் வேலை திட்டத்தில் பெயரை மாற்றி அதன் நிதியை 2500 கோடி ரூபாய் வரை குறைத்த ஒன்றிய அரசை கண்டித்து, புதிய சட்ட மசோதாவை கிழித்து எரியும் போராட்டம் நடைபெற்றது. கமுதி தாலுகா தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் நீராவி முருகேசன், பொருளாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துனைத்தலைவர் முருகன் நன்றியுரை யாற்றினார். இக்கூட்டத்தில் கமுதி தாலுகா குழு சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கமுதியில் ஆர்ப்பாட்டம்
- Kamudi
- பஞ்சாயத்து யூனியன்
- கோட்டயமேடு, கமுதி
- அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலர்களின் உரிமைகளுக்கான சங்கம்
- யூனியன் அரசு
