சென்னை: திமுக மூத்த முன்னோடி எல்.கணேசன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘மக்களின் நன்மதிப்பை பெற்று அரசியல் களத்தில் பணியாற்றியவர் எல்.கணேசன். திராவிட இயக்கத்தின் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். அவர் மறைந்த செய்தியால் பெரும் துயருற்றேன்’ என முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
