சென்னை: பொங்கல் பரிசாக 2.23 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.3,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். பொங்கல் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்பட உள்ளது.
