போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை, ஜன. 1: இந்திய மாணவர் சங்கத்தின் 56வது அமைப்பு தினத்தை முன்னிட்டு இந்திய மாணவர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் புதுக்கோட்டையில் போதை ஒழிப்பு பேரணி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணியை சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் மோகன் தொடங்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள அறிவியல் இயக்க அரங்கில் நிறைவடைந்தது.

அங்கு நடைபெற்ற கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் எம்.வாசுதேவன் தலைமை வகித்தார்.‘போதை ஒழிப்பில் மாணவர்களின் பொறுப்பு’ என்ற தலைப்பில் காவல் ஆய்வாளர் சுகுமாறன், ‘நீயும் தலைவன்’ என்ற தலைப்பில் கவிஞர் எம்.எஸ்.கலந்தார், ‘அமைப்பின் வரலாறு’ என்ற தலைப்பில் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் ஜி.கே.மோகன், எதிர்காலக் கடமைகள் என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் ஆர்.வசந்தகுமார் ஆகியோர் பேசினர். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் பிரியங்கா வரவேற்க, செயற்குழு உறுப்பினர் காவியன் நன்றி கூறினார். மாநில செயற்குழு உறுப்பினர் மகாலெட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நந்தனா, சஞ்சைபாரதி, நதுமிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: