அரியலூர் ஜன. 1: அரியலூர் மாவட்டத்தில் வாராந்திர சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து 19 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் குறித்து ஏடிஎஸ்பி பொதுமக்களிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டிஎஸ்பி சண்முகம் கலந்து கொண்டார்.
