வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை முறையை அமல்படுத்த வேண்டும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜன.1: தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வங்கி முன்பு மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த அன்பழகன், தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வினோத், இந்திய ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க இணை பொதுசெயலாளர் சுவாமிநாதன், துணை பொதுச்செயலாளர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை முறையை அமல்படுத்த வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் சங்க உதவி பொதுச்செயலாளர் யோகராஜ், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பை சேர்ந்த புவனா, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பை சேர்ந்த காசிராஜன், ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயராஜன் உட்பட வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: