திருத்துறைப்பூண்டியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்

திருத்துறைப்பூண்டி, ஜன. 1: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் 3வது வார்டில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் குப்பைகளை பொது இடங்களில் கொட்ட கூடாது என்று பொதுமக்களிடம் நகர்மன்ற தலைவர் அறிவுறுத்தினார்.நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதி, சுகாதார ஆய்வாளர் மாரிச்சாமி, சுகாதார மேற்ப்பார்வையாளர் ஈஸ்வரன், தூய்மை இந்தியா இயக்க மேற்பார்வையாளர் அம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் என் குப்பை என் பொறுப்பு என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Related Stories: