காரைக்கால்-பேரளம் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட வேண்டும்

காரைக்கால், ஜன.1: பாரத பிரதமர் மோடிக்கு, காரைக்கால் மாவட்ட ரயில் டிராவலர்ஸ் வெல்பர் அசோஸியேசன் சார்பில் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
காரைக்கால் – திருநள்ளார் – பேரளம் வழித்தடத்தில் 23.5 கிமீ நீளத்திற்கு உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை, அகல ரயில் பாதையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. இப்பணிக்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டு, மின்மயமாக்கலோடு, பணி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு செய்து சான்று அளித்துள்ளார். அவர் சான்றழித்து இதுவரை 7 மாதங்கள் கடந்தும் நிரந்தரமாக ரயில்கள் இயக்கப்படவில்லை.

இந்த ரயில்பாதை வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர், திருமலைராயன்பட்டினம், காரைக்கால், திருநள்ளார், அம்பகரத்தூர் ஆகிய பகுதிகளை நேரடியாக மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் சென்னையோடு இணைக்கிறது. எனவே வருகிற ஜனவரி 13ம்தேதி ராமேஸ்வரத்திற்கு பிரதமர் வருகை தரும் போது, இந்த ரயில் பாதையையும் திறந்து வைக்க வேண்டும்.

தமிழர்களின் திருநாளான பொங்கல் பரிசாக இதை திறந்து வைத்தால் காரைக்கால் மாவட்ட மக்களுக்கும் திருநள்ளார் வந்து செல்லும் பக்தர்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: