உத்தமபாளையம், டிச. 30: உத்தமபாளையம் பகுதியில், பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பாக வாழை சாகுபடியில் உரமிடுதல் குறித்து விளக்கம் தரப்பட்டது. பெரியகுளம் அரசு தோட்டக் கலை கல்லூரி மாணவர்கள், கிராமப்புற தோட்டக்கலை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை நான்காம் ஆண்டு மாணவர்கள் மௌரிஷ், நவீன் குமார், நவீன் பிரசன்னா, பாக்கிய நாத், பங்கஜ் காலா,தோ பூனேஷ்வரன், பிரபாகரன், ராமஜெயம், ரோசக் ஹனன் சாமுவேல் ரா,சே.சஞ்சய் குமார், சக்திவேல் உள்ளிட்ட மாணவர்கள் ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி, கோகிலாபுரம் உள்ளிட்ட ஊர்களில் பயிரிடப்பட்டுள்ள வாழையில் அதிக விளைச்சல் பெறுவதற்கான செய்முறை பயிற்சிகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர். தொடர்ந்து வாழைகுலைக்கு உரமிடுதல் முறை,
வாழை குலைக்கு உரமிடும் போது, வாழை குலையில் நேரடியாக ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம், சத்துக்கள் எளிதாகச் சென்றடைந்து விளைச்சலை மேம்படுத்துகின்றன எனவும் இதற்கான செய்முறை விளக்கம் பற்றி விரிவாக எடுத்து கூறினர். இதில் வாழை விவசாயிகள் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
