அமமுக சார்பில் நலத்திட்ட உதவி

அரூர், ஜன.22: அரூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடில், ஈச்சம்பாடி ஆகிய இடங்களில் அமமுக சார்பில், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. ஆட்சி மன்ற குழு தலைவரும், அமைப்பு செயலாளருமான முன்னாள் எம்எல்ஏ முருகன், எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன், மாவட்ட பேரவை செயலாளர் தென்னரசு, மாவட்ட இணை செயலாளர் ரத்தினம் கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் நரசிம்மன், கண்ணதாசன், தரணிராஜ், நகர செயலாளர் தீப்பொறி செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>