கோயில் உண்டியல் உடைப்பு

சாயல்குடி, டிச. 27:க டலாடி அருகே ஏ.புனவாசல் – சிறுகுடி சாலையில் ஏந்தல் பொன்னந்தி காளியம்மன், கண்ணாயிரமூர்த்தி அய்யனார், கருப்பண்ணசுவாமி கோயில் உள்ளது. அப்பகுதியில் உள்ள 110 கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோயிலில் வியாழக்கிழமை இரவு மர்மநபர்கள் கோயிலுக்குள் புகுந்து கருப்பண்ணசாமி அருகே வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் அங்கிருந்த பொன்னந்தி காளியம்மன் அருகே உள்ள உண்டியலையும் உடைத்து, கண்காணிப்பு கேமராக்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றனர். இதுகுறித்து கடலாடி காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகி பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: