கார்பெண்டர் தற்கொலை

கோவை, ஜன.20: கோவை ராமநாதபுரம் அருணாச்சல காலனியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (55). கார்பெண்டர். இவர் கொரோனா நோய் பரவல் காரணமாக வேலை வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்தார். மீண்டும் அவர் வேலை கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால் போதுமான வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. வறுமையில் தவித்த இவர், விஷம் குடித்து தற்கொலை ெசய்து கொண்டார். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>