கோவை, டிச. 15: கோவை உப்பிலிபாளையம் மேம்பாலம் மூலமாக மில் ரோடு, புருக்பாண்ட் ரோடு, டாக்டர் நஞ்சப்பா ரோடு, கூட்செட் ரோடு பகுதிகளுக்கும், கடலைக்கார சந்து பகுதிக்கும் வாகனங்கள் சென்று வருகிறது. மேம்பாலம் பழுதடைந்து பராமரிப்பின்றி காணப்படுகிறது. ரயில் செல்லும் போது கழிவுகள் சப்வே பகுதியில் விழுவதாகவும், தண்ணீர் கீழே தேங்கியிருப்பதாகவும் புகார் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புருக்பாண்ட் ரோடு செல்லும் சப்வே பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது.
இங்கே குழாய் சேதமானதால் அதை மாற்றும் பணியில் மாநகராட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மேலும் அதற்கு இணையான சோமசுந்தரா மில்பாலம் செல்லும் ரோட்டிலிருந்து சப்வே பகுதிக்குள் நுழைந்து செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பணிகளை வேகமாக நடக்கிறது.
விரைவில் இந்த பகுதி போக்குவரத்திற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்வே முக்கிய பாதை அடைக்கப்பட்டதால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நீடித்து வருகிறது.
