கலெக்டர் ஆபிசில் பொதுமக்கள் தர்ணா

தர்மபுரி, ஜன.19: இலவச வீட்டுமனை வழங்கிய இடத்தில், அடுக்குமாடி கட்டும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம், கொண்டகரஅள்ளி கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கொண்டகரஅள்ளி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கடந்த 2008ம் ஆண்டு பொதுபயன்பாட்டில் இருந்த 1.58 ஏக்கர் நிலத்தை, 114 குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்து குறியீடு செய்தனர். தற்போது, அதே இடத்தில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே, அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை ரத்து செய்து, 114 பேருக்கும் ஒதுக்கப்பட்ட நிலத்தை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Related Stories:

>