அரூரில் எருதுவிடும் விழா

அரூர், ஜன.19: பொங்கல் விழாவையொட்டி அரூரில், எருதுவிடும் விழா நேற்று நடந்தது. இதையொட்டி வெளியூரில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் காளியம்மன், மாரியம்மன், உள்ளூர் மாரியம்மன் ஆகிய சுவாமிகள் மற்றும் காளைகள் ஊர்வலமாக  பஸ்நிலையம், கடைவீதி மஜித்தெரு வழியாக அழைத்து வரப்பட்டு, நான்கு ரோட்டில் உள்ள மாரியம்மன் கோயில் முன் எருதுவிடும் விழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை  24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்க நிர்வாகிகள் தனபால், கதிரேசன், சண்முகம், குமரன், சரவணன் செய்திருந்தனர்

Related Stories: