ஸ்வயம் தேர்வு மையம் ஒதுக்கீடு: திமுக தலைவர் முயற்சியால் முடிவை மாற்றிய ஒன்றிய அரசு பி.வில்சன் எம்பி எக்ஸ்தள பதிவு

சென்னை: திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி.யின் எக்ஸ்தள பதிவு: தமிழ்நாட்டை சேர்ந்த பி.எட் மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள SWAYAM தேர்வு மையங்களை மாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில், ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, உரிய உத்தரவுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதை தொடர்ந்து 16,000 தேர்வர்களில் 14,700 பேருக்கு அவர்களது சொந்த மாவட்டங்களிலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 1,300 தேர்வர்களுக்கு அண்டை மாநிலங்களில் அருகில் உள்ள மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நன்றி.

Related Stories: