கரூர் சின்னாண்டாங்கோயில் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கரூர், ஜன. 19:கரூர் சின்னாண்டாங்கோயில் பகுதியில் சக்தி நகர்ப்பகுதிக்கான சாலை செல்கிறது. இந்த சாலையோரம் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாயின் உட்புறம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிந்து பல்வேறு பகுதிகளுக்கு பரவிச் செல்கிறது. கோடை காலங்களில் நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. சக்தி நகர்ப்பகுதி மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இதுபோல குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிவு என்பது அதிகளவு நடைபெற்று வருகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சக்தி நகர் பிரிவு அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவது குறித்து கண்காணித்து விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>