குளித்தலை பகுதியில் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு 20ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் எம்எல்ஏ செந்தில்பாலாஜி அறிவிப்பு

குளித்தலை, டிச.17: கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதிக்குட்பட்ட கே.பேட்டை, வதியம், வைகை நல்லூர், குமாரமங்கலம், பொய்யாமணி, இனுங்கூர், நல்லூர், நெய்தலூர் மற்றும் லாலாபேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் கனமழையால் சேதமடைந்தது. இந்நிலையில் நச்சலூர் பகுதிக்கு வந்த கரூர் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான செந்தில்பாலாஜி அங்கு பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டார். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது செந்தில்பாலாஜி எம்எல்ஏ தெரிவித்ததாவது: இப்பகுதியில் பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட அதிகாரிகள் வரவில்லை. அதனால், திமுக தலைவர் ஸ்டாலின் அனுமதி பெற்று வரும் 20ம் தேதி காலை 10 மணிக்கு குளித்தலை தொகுதி நங்கவரத்தில் கரூர் மாவட்ட திமுக சார்பில் பாதிக்கப்பட்ட நெற்பயிர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

Related Stories:

>