மக்கள் கிராம சபை கூட்டம் நடக்கும் இடம் மாற்றம் இன்பசேகரன் எம்எல்ஏ அறிக்கை

தர்மபுரி, ஜன.17: தர்மபுரி மாவட்டத்தில், தொடர் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் கிராம சபை கூட்டம், தூள்செட்டி ஏரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, காரிமங்கலம் ஒன்றியம் பைசுஅள்ளி ஊராட்சி கெங்குசெட்டிப்பட்டியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மக்கள் கிராமசபை கூட்டம், கடந்த 7ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. தொடர் மழை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (18ம்தேதி) காலை 8 மணிக்கு திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டம், பாலக்கோடு ஒன்றியம் மாரண்டஅள்ளி அருகே தூள்செட்டி ஏரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு (17ம் தேதி) சென்னையில் இருந்து கார் மூலம் கிருஷ்ணகிரி வருகிறார். அங்கு தங்கும் அவர், நாளை காலை 8 மணிக்கு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், மகளிர் மற்றும் இளைஞர் அணியினர், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும். கட்சியினர் இதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு இன்பசேகரன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories:

>