தடையை மீறி ஆர்ப்பாட்டம்

கோவை, டிச. 8: திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக நேற்று கோவை செல்வபுரம், காந்தி பார்க் பகுதியில் தடையை மீறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். அதேபோல இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் செட்டி வீதியில் 10க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.

 

Related Stories: