விவசாயிகளுக்கு அழைப்பு

தர்மபுரி,  ஜன.13:  தர்மபுரி வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் ராபி  பருவம் 2020-2021 ஆண்டுக்கான நெல், ராகி, மக்காச் சோளம், துவரை, நிலக்கடலை,  பருத்தி, கரும்பு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்ய அழைப்பு  விடுக்கப்பட்டுள்ளது. பயிர் மற்றும் விவசாய நகை கடன் பெறும் விவசாயிகள்,  இத்திட்டத்தில் வங்கிகள் மூலமாக காப்பீடு செய்யலாம். பயிர்கடன் பெறாத  விவசாயிகள், பொது சேவை மையங்கள், தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன்  சங்கங்கள் மூலமாக காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளார்.

Related Stories:

>