ஐவிடிபி பணியாளர்கள் 420 பேருக்கு பொங்கல் பரிசு

கிருஷ்ணகிரி, ஜன.13: கிருஷ்ணகிரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐவிடிபி தொண்டு நிறுவனமானது கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அமைத்து, கிராமப்புற ஏழை மகளிர் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் 14,302 சுய உதவிக்குழுக்களில் இருந்து 471 குழந்தைகளை சேர்ந்த 85,635 உறுப்பினர்கள் இவ்வாண்டு ₹72 கோடி லாப பங்கீடாக பெற்று பயனடைந்துள்ளனர். உபரி சேமிப்பாக ₹70 கோடி என மொத்தம் ₹142 கோடியை உறுப்பினர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டுள்ளனர். மேலும், ஐவிடிபி, வங்கி மற்றும் சங்க கடனாக ₹8,280 கோடியும், பல்வேறு சுகாதார திட்டங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் ஐவிடிபி பணியாளர்கள் 420 பேருக்கு தலா ₹500 மதிப்பில் அரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பாக மொத்தம் ₹2 லட்சம் மதிப்பிலான பரிசினை ஐவிடிபி நிறுவனரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

Related Stories:

>