வத்தலக்குண்டு, டிச.6: வத்தலக்குண்டு அருகே, நீரின்றி வீரன்குளம் கண்மாய் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் உள்ளது வீரன் குளம் கண்மாய். இக்கண்மாய் பல கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின்போது இந்த கண்மாய் நிரம்புவது வழக்கம்.
இந்நிலையில் இந்தாண்டு அப்பகுதியில் போதிய மழை பெய்யாததால், வீரன்குளம் கண்மாய் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறதுஇதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மஞ்சளாறு அணையில் இருந்து இந்த கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
