எஸ்பி ஆபிசில் காதல் ஜோடி தஞ்சம்

தர்மபுரி, ஜன.12: பென்னாகரம் அருகே ஆரல்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், திருப்பூர் மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த மேனகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் நேற்று காலை பாதுகாப்பு கேட்டு தர்மபுரி எஸ்.பி. ஆபிசில் தஞ்சமடைந்தனர். அப்போது, அங்கிருந்த போலீசாரிடம் மேனகா கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  திருப்பூர் டவுனில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது, கடந்த 2 வருடங்களாக நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 9ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில், சீனிவாசன் என்னை கடத்திச் சென்று விட்டதாக திருப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் செய்துள்ளனர். மேலும், உறவினர்களும் மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனவே, எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>