மசாலா கடன் பத்திரங்களை வெளியிட்டதில் மோசடி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ஈடி நோட்டீஸ்

திருவனந்தபுரம்: லண்டன் பங்குச்சந்தையில் கேரள அரசுக்காக பத்திரங்களை வெளியிட்டதில் மோசடி நடந்துள்ளதாக கூறி கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு விளக்கம் கேட்டு மத்திய அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திற்கு நிதி திரட்டுவதற்காக லண்டன் பங்குச்சந்தையில் 9.72 சதவீத வட்டியில் ரூ.2150 கோடிக்கு மசாலா கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. இதில் அந்நிய செலாவணி மோசடி நடந்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து கடந்த சில வருடங்களாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக விளக்கம் கேட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Related Stories: