ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனத்தின் ரூ.55 கோடி சொத்துக்கள் முடக்கம்

புதுடெல்லி: அன்னிய செலாவணி விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கையாக ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரக்ச்சர் லிமிடெ(ஆர் இன்ப்ரா) நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.55 கோடி சொத்துக்களை அமலாக்கதுறை கைப்பற்றியுள்ளது. ஆர்-இன்ப்ரா நிறுவனம் இந்திய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலை கட்டுமான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த பணம் பல்வேறு போலி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அன்னிய செலாவணி மேலா ண்மை சட்ட பிரிவின் கீழ் வழக்ககு பதிவு செய்த அமலாக்கத்துறை ரிலையன்ஸ் இன்ப்ராவின் 13 வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. அதில் அந்த நிறுவனத்தின் ரூ.55 கோடி சொத்துக்களும் அடங்கும்.

Related Stories: