தமிழக இளைஞர்கள் அறிவின் பக்கம் நிற்பார்கள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

சென்னை: சென்னை, தி.நகர் சர்.பிடி தியாகராயர் அரங்கில், ‘ ஒரு டிரில்லியன் டாலர் கனவு‘ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.

திருஞானம் எழுதிய இந்த நூல் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, தலைமை உரையில் கூறியதாவது:
நாட்டின் பொருளாதாரம் வளர வளர மாற்றமும் வருகிறது. யார் முதல்வராக வந்தாலும், நாட்டு மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி மக்களுடன் பயணித்து, பல்வேறு வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வெறும் பொருளாதார வளர்ச்சிக்காக மட்டும் இதை பார்க்காமல் சமத்துவத்துவத்தையும் பார்க்க வேண்டும்.

சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் பார்க்க வேண்டும். இது குறித்து இளைஞர்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வகையில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்று நான் கருதுகிறேன்.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தியாகும் பொருளின் மொத்த உற்பத்தி மதிப்பே ஜிடிபி என்று கூறப்படுகிறது. 2005ல் நமது ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ள மாநிலம் தமிழ்நாடு என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் ஒன்றிய அரசின் மூலம் நாம் எப்படி வஞ்சிக்கப்படுகிறோம் என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

நாம் வளர்ந்துள்ள வளர்ச்சியை ஒப்பிடும்போது மற்ற மாநிலங்கள் வளர்ச்சியில் நம்மைவிட பின்தங்கியுள்ளன. அதற்கு காரணம் நாம் முன்கூட்டியே வளர்ச்சிக்கான அடித்தளத்தை நாம் ஏற்கெனவே உருவாக்கிவிட்டோம். அது தற்போது நமக்கு பயன்கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இதை செய்தவர் கலைஞர் தான். கடந்த 40 ஆண்டுகளில் இதற்கான அடித்தளத்தை கலைஞர் எப்படி உருவாக்கினார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்றுவோம் என்று சிலர் கூறுகின்றனர். இங்கு அறிவா, அரசியலா என்ற நிலைப்பாட்டை முன்வைக்கின்றனர். ஆனால் நமது இளைஞர்கள் அறிவின் பக்கம்தான் இருப்பார்கள். இவ்வாறு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Related Stories: