யுனெஸ்கோ அமைப்பின் கலாசார பாரம்பரிய பட்டியலில் தீபாவளி பண்டிகை சேர்ப்பு

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் அரிய பாரம்பரிய கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையோன குழுவின் 20வது அமர்வு கடந்த 8ம் தேதி துவங்கியது. இதில், 78 நாடுகளிலிருந்து வந்த பல்வேறு பரிந்துரைகளை ஆய்வு செய்த ஐநா கலாசார நிறுவனம், தீபாவளி பண்டிகையை பட்டியலில் சேர்த்துள்ளது குறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

இது குறித்து ஒன்றிய கலாசார துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிக்கை:
இந்தியாவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள், மனித குலத்தின் கலாசார பாரம்பரியப் பட்டியலில் தீபாவளிப் பண்டிகையும் சேர்க்கப்பட்டுள்ளது. தீபாவளியைக் கொண்டாடும் நோக்கமான, நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் சமத்துவம் போன்றவற்றை உலகளவில் எடுத்துச் செல்ல இந்தக் கவுரவம் உதவுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

மோடி வரவேற்பு: யுனெஸ்கோவின் அறிவிப்பை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

Related Stories: