சென்னை: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட இறுதி செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல், தலைமை தேர்தல் அதிகாரியின் அலுவலகம் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. வாக்குச்சாவடிகளின் இறுதிப் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்கு முன், மாநிலத்தில் 68467 வாக்குச்சாவடிகள் இருந்தன. வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்புக்குப் பிறகு மாநிலத்தில் 75035 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 75,035 வாக்குச்சாவடிகள்
- சென்னை
- தலைமை தேர்தல் அதிகாரி
- அர்ச்சனா பட்நாயக்
- மாவட்ட தேர்தல் அலுவலர்கள்
- இந்திய தேர்தல் ஆணையம்
- தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம்
- இந்தியன்
